ஏர்டெல், வோடஃபோன் 42% கட்டண உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!

ஏர்டெல், வோடஃபோன் 42% கட்டண உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
ஏர்டெல், வோடஃபோன் 42% கட்டண உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!

ஏர்டெல், வோடஃபோன் ஆகிய செல்போன் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை 42 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் செல்போன் சேவையை தொடங்கிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, கட்டணங்களை அதிரடியாக குறைத்தன. குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வருகைக்குப் பிறகு மேலும் கட்டணங்கள் குறைக்கப்பட்டன.

இந்நிலையில் தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறி, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள், தங்களது கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளன. ஏர்டெல் நிறுவனத்தின், இணையதள டேட்டா மற்றும் கால் செய்யும் அன்லிமிடெட் திட்டத்தில் 28 நாட்களுக்கான கட்டணத்தை 129 ரூபாயிலிருந்து 148 ரூபாயாக உயர்த்தியுள்ளது. 

இதேபோல் ஓர் ஆண்டுக்கான திட்டம் ஆயிரத்து 699 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 398 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வோடஃபோன் நிறுவனம் 28 நாட்களுக்கான கட்டணத்தை 179 ரூபாயிலிருந்து 299 ரூபாயாகவும், ஓராண்டு கட்டணத்தை ஆயிரத்து 699 ரூபாயிலிருந்து இரண்டாயிரத்து 399 ரூபாயாக உயர்த்திள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

இதேபோல ஜியோ நிறுவனமும் 40 விழுக்காடு வரை கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது டிசம்பர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com