ரூ.5 முதல் ரூ.399 வரை... அதிரடி ஆஃபர்களை அறிவித்த ஏர்டெல்!

ரூ.5 முதல் ரூ.399 வரை... அதிரடி ஆஃபர்களை அறிவித்த ஏர்டெல்!

ரூ.5 முதல் ரூ.399 வரை... அதிரடி ஆஃபர்களை அறிவித்த ஏர்டெல்!
Published on

பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் முதல் 399 ரூபாய் வரை புதிதாக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் தாக்கத்திற்கு பின், ஏர்டெல், வோடஃபோன், உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு கட்டணச் சலுகை மற்றும் சிறப்பு டேட்டா சலுகைகளை அதிரடியாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் 5 ரூபாய் முதல் சலுகைகளை வழங்கி உள்ளது. அதன்படி, ரூ.5, ரூ.8, ரூ.15, ரூ.40, ரூ.349 மற்றும் ரூ.399 வரை பல்வேறு வகையிலான ஆஃபர்களை வழங்கியுள்ளது.

அந்த வகையில், 5 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு 4ஜிபி 3ஜி, 4ஜி டேட்டா, இது ஒரு முறை ரீசார்ஜ் மற்றும் போஸ்ட் 4ஜி சிம் அப்கிரடேசனுக்கு மட்டும் பொருந்தும்.

8 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் லோக்கல், எஸ்.டி.டி. அழைப்புகள் 56 நாட்களுக்கு 30 பைசாவில் பேசலாம்.

40 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் வேலிடிட்டியுடன் 35 ரூபாய் டாக்டைம் கிடைக்கும்.

60 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் வேலிடிட்டியுடன் 58 ரூபாய் டாக்டைம் கிடைக்கும்.

மற்றும் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1 ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com