அப்பாடா, மீண்டது ஏர்செல்: வாடிக்கையாளர்கள் நிம்மதி!

அப்பாடா, மீண்டது ஏர்செல்: வாடிக்கையாளர்கள் நிம்மதி!

அப்பாடா, மீண்டது ஏர்செல்: வாடிக்கையாளர்கள் நிம்மதி!
Published on

சேவை பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக ஏர்செல் நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். அழைப்புகள் வரத்தொடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்‌கள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது.

ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் இணைப்புகள் செயல் இழந்ததால் கடந்த 3 தினங்களாக அதன் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். செல்போனில் யாரையும் அழைக்க இயலாததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் பலர்,‌ ஏர்செல் நிறுவன அலுவலகங்களை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்தனர். 

3 தினங்களுக்குப் பிறகு தற்போது ஏர்செல் சேவை சீரடைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து, ஆன் செய்தால் வழக்கம் போல் தடையற்ற சேவை கிடைக்கும் எனக் கூறியுள்ளார். 

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் அழைப்புகள் தங்களின் செல்போல் எண்களுக்கு அழைப்புகள் வரத்தொடங்கியுள்ளதாக ஏர்செல் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com