ரூ.1,500 கோடி கடன் கேட்கிறது ஏர்-இந்தியா

ரூ.1,500 கோடி கடன் கேட்கிறது ஏர்-இந்தியா

ரூ.1,500 கோடி கடன் கேட்கிறது ஏர்-இந்தியா
Published on

ஏர்- இந்தியா நிறுவனம் குறுகிய கால கடனாக, ரூ.1, 500 கோடியை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர்-இந்தியா விமான நிறுவனம், கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பு, இந்நிறுவனம் குறுகிய கால கடனாக ரூ.3,250 கோடியை திரட்டியது. இந்நிலையில் மீண்டும் குறுகிய கால கடனை எதிர்நோக்கியுள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு உத்தரவாதத்துடன் கூடிய ரூ.1,500 கோடி கடன் தொகையை, உடனடி செலவுகளுக்காக எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடனை திரும்ப அளிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 27, 2018 என்றும்  இந்தத் தேதி, தேவையென்றால் நீட்டிக்கப்படும் என்றும் அரசு அளிக்கும் உத்தரவாதம் ஜூன் 27, 2018 வரையோ, அல்லது நிறுவனத்தை தனியார் மயமாக்குவது வரையோ நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வரும் ஏர் இந்தியா விமானப் போக்குவரத்தில் கடும் போட்டியையும் சந்தித்து வருகிறது. இதையடுத்து அந்நிறுவன பங்குகளை விற்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com