அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்திய வணிகர்கள் ஒப்பந்தம்

அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்திய வணிகர்கள் ஒப்பந்தம்

அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்திய வணிகர்கள் ஒப்பந்தம்
Published on

‌‌‌‌‌‌‌‌‌‌‌அமெரிக்காவில் இருந்து ஒரு லட்சம் டன் சோயா ஆயிலை இறக்குமதி செய்ய இந்திய வணிகர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சமையல் எண்ணெய்யை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, அர்ஜெண்டினா, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து சோயா எண்ணெயை இறக்குமதி செய்வது வழக்கம். ஆனால் அந்த நாடுகளில் வறட்சி காரணமாக சோயாவிதைகள் உற்பத்தி குறைந்துள்ளதால் எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளது. அதேநேரம், உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எண்ணெய்யின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, இந்தோனேஷியாவும் பாமாயில் விலையை அதிகரிக்கும் நோக்கில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்திய வர்த்தகர்கள் அமெரிக்காவில் இருந்து ஒரு லட்சம் டன் சோயா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடிவுசெய்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com