\
ஆதித்யா பிர்லா கேபிடல் சி.இ.ஓ. விஷாகா முல்யே

ஆதித்யா பிர்லா கேபிடல் சி.இ.ஓ. விஷாகா முல்யே

ஆதித்யா பிர்லா கேபிடல் சி.இ.ஓ. விஷாகா முல்யே
Published on: 

அதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக விஷாகா முல்யே நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குநராக இருக்கும் இவர் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

ஆதித்யா பிர்லா இயக்குநர் குழு இதற்கான ஒப்புதலை சனிக்கிழமை எடுத்தது. ஐசிஐசிஐ வங்கியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் இவர். தற்போது ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் அஜய் ஸ்ரீனிவாசன் குழுமத்தின் வேறு ஒரு முக்கிய பொறுப்பை கையாள இருப்பதால் விஷாகா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com