'சிப்' பற்றாக்குறை: 30% உற்பத்தி குறையும் அபாயத்தில் மாருதி

'சிப்' பற்றாக்குறை: 30% உற்பத்தி குறையும் அபாயத்தில் மாருதி

'சிப்' பற்றாக்குறை: 30% உற்பத்தி குறையும் அபாயத்தில் மாருதி
Published on

தற்போது ஆட்டோமொபைல் துறையில் உள்ள முக்கிய சிக்கல் என்பது கோவிட் கிடையாது, 'சிப்' பற்றாக்குறைதான். இதனால் பல நிறுவனங்களின் எதிர்கால திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத உற்பத்தியில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உற்பத்தி குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் சுமார் 1.6 லட்சம் முதல் 1.7 லட்சம் கார்கள் வரை தயாரிக்க மாருதி திட்டமிட்டுள்ளது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் 1.1 லட்சம் முதல் 1.2 லட்சம் வரையிலே உற்பத்தி இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நிறுவனத்தின் வருமானம் இழப்பு மட்டும் ரூ.2500 கோடி முதல் ரூ.3500 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த உற்பத்தி குறைவால் வரும் விழாக்காலத்தில் செயற்கையான தேவை உருவாகும் என தெரிகிறது. செப்டம்பர் காலாண்டு உற்பத்தியில் பெரும் சரிவு இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. தவிர அடுத்து வரும் சில மாதங்களிலும் நிச்சயமற்ற சூழலே இருக்கும் என்பதால் அடுத்த சில மாதங்களிலும் உற்பத்தியில் நிச்சயமற்ற சூழல் இருக்கும் என தெரிகிறது.

கடந்த சில நாட்களாக இந்த பங்கில் விலை சரிந்துவருகிறது. 20 நாள் சராசரி விலையை விட தற்போது விலை குறைந்து வர்த்தகமாகி வருவது கவனிக்கத்தக்கது. மூலப்பொருட்கள் விலை உயர்வு, எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை மற்றும் செமி கண்டக்டர் தட்டுப்பாடு என ஆட்டோமொபைல் துறை பல முனை சிக்கலில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com