ஏப்ரல் டூ நவம்பர்: SUV வாகன விற்பனை 57 சதவிகிதம் அதிகரிப்பு

ஏப்ரல் டூ நவம்பர்: SUV வாகன விற்பனை 57 சதவிகிதம் அதிகரிப்பு
ஏப்ரல் டூ நவம்பர்: SUV வாகன விற்பனை 57 சதவிகிதம் அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் யுட்டிலிட்டி வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பேஸஞ்சர் கார் விற்பனை 6 சதவிகிதமும், யுட்டிலிட்டி வாகனங்கள் விற்பனை 57 சதவிகிதமும், வேன்களின் விற்பனை 20 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சற்று அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக SUV வாகனங்களின் விற்பனையில் 4.4 முதல் 4.7 மீட்டர்கள் வரை நீளம் கொண்ட, 20 லட்ச ரூபாய்க்கு கீழ் உள்ள வாகனங்கள் மற்றும் 20 முதல் 30 லட்ச ரூபாய் வரையிலான விலை கொண்ட சொகுசு கார்களின் விற்பனை 94 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். அதே போல 4 முதல் 4.4 மீட்டர்கள் வரை நீளம் கொண்ட, 20 லட்ச ரூபாய்க்கு கீழ் உள்ள யுட்டிலிட்டி வாகனங்களின் விற்பனை 34 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். எப்போதும் போல மாருதி சுஸுகி நிறுவனம் இந்த SUV வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ளதாம். சந்தையில் விற்பனையான மொத்த SUV வாகனங்களில் 21.4 சதவிகிதம் மாருதி சுஸுகி நிறுவன வாகனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

ஹூண்டாய் கிரெட்டா (80,476 யூனிட் அடிப்படையில்), ஹூண்டாய் வென்யூ (63,922), கியா செல்டோஸ் (65,444), கியா சோனட் (50,357), டாடா நெக்ஸான் (50,914) மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (35,561) என இந்த ஆறு கார்கள் SUV வாகன விற்பனையில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 40 சதவிகித SUV வாகன விற்பனையில் இந்த கார்களின் பங்கு உள்ளதாம். 

இந்தியாவில் மக்களிடையே SUV வாகனங்கள் வாங்க ஏற்பட்டுள்ள ஆர்வம்தான் இந்த விற்பனை அதிகரிக்க பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் செமிகண்டக்டர் சிப் தட்டுப்பாடு காரணமாக விற்பனையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவிக்கபட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com