வணிகம்
தண்ணீர் கேன் உள்ளிட்ட 49 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு
தண்ணீர் கேன் உள்ளிட்ட 49 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு
தண்ணீர் கேன், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
20 லிட்டர் குடிநீர் கேன், தனியார் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான வரி 18ல் இருந்து 12% ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரம் உள்ளிட்ட மதிப்பு மிக்க கற்களுக்கு வரி 3ல் இருந்து 0.25% ஆக குறைக்கப்படுகிறது.
மிட்டாய், நீர்ப்பாசன சாதனங்கள், மெஹந்தி பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர குறிப்பிட்ட ஜாப் ஒர்க்குகளுக்கும் வரி குறைக்கப்படுகிறது. இவை அனைத்தும் வரும் 25ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிக்குறைப்பு காரணமாக அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது