கொரோனா 2-ம் அலை எதிரொலி: 270+ ஓட்டல்கள், 20,000+ அறைகள் மூடல்

கொரோனா 2-ம் அலை எதிரொலி: 270+ ஓட்டல்கள், 20,000+ அறைகள் மூடல்
கொரோனா 2-ம் அலை எதிரொலி: 270+ ஓட்டல்கள், 20,000+ அறைகள் மூடல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஹையாத் ஓட்டல் தற்காலிகமாக மூடப்பட்டது பலருக்கும் தெரியும். ஆனால், இந்தியாவில் 270-க்கும் மேற்பட்ட பிராண்டட் ஓட்டல்கள் இந்த கொரோனா இரண்டாம் அலையில் மூடப்பட்டுள்ளது. மொத்தமாக 20,000-க்கும் மேற்பட்ட அறைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தவிர எட்டு குழும நிறுவனங்கள் நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளன.

ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் பல மாநிலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அதனால் ஓட்டல்கள் அறைகளின் முன்பதிவு விகிதம் மிகவும் குறைந்தது. சுமார் 20 சதவீதத்துக்கு முன்பதிவு விகிதம் குறைந்ததால் ஓட்டல்களை மூடும் நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும், இரண்டாம் அலைக்குப் பிறகு ஓட்டல் துறையில் பெரும் மாற்றம் வரும் எனத் தெரிகிறது. ஏற்கெனவெ இருந்த ஒப்பந்த முறைகளில் மாற்றம் அல்லது ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்குதல் உள்ளிட்டவை அடுத்த சில மாதங்களில் நடக்கும் எனத் தெரிகிறது. பெரிய நிறுவனங்கள் ஓட்டலை வாங்கும்பட்சத்தில் சிறிய நிறுவனங்கள் போட்டியிட முடியாத சூழல் உருவாகும் என தெரிகிறது.

இந்தச் சூழலில் ஐடிசி குழுமத்தின் ஓட்டல் பிராண்டுகளில் ஒன்றான வெல்கம் ஓட்டலை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது. தற்போது 19 ப்ராபர்டிகள் இருக்கும் சூழலில் இன்னும் ஓர் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 25 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. கோவிட்டுக்கு பிறகு உள்நாட்டு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை உயரும் என ஐடிசி கணித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com