2022 ஜீப் மெரிடியன் கார்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

2022 ஜீப் மெரிடியன் கார்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
2022 ஜீப் மெரிடியன் கார்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

இந்தியாவில் வரும் மே அல்லது ஜூன் மாத வாக்கில் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ‘ஜீப்’ நிறுவனத்தின் மெரிடியன் கார் அறிமுகமாக உள்ளது. மெரிடியன், மூன்று ரோ (வரிசை) கொண்ட எஸ்.யூ.வி ரக கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சாலையில் இந்த கார் பலமுறை டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டுள்ளது அதற்கு சான்று. 

>மெரிடியன் காரின் புறத்தோற்றம் அப்படியே காம்பஸ் காரை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. புதுவிதமான அலாய் வீல்களை இந்த கார் கொண்டுள்ளது. 

>பனோரமிக் சன் ரூஃப், 10.1 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே, இரண்டாவது மற்றும் மூன்றாவது சீட் ரோக்களுக்கு ஏசி வென்ட் (Vents) என உட்புறத் தோற்றமும் அசத்துகிறது. 

>இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்டுகளில் கிடைக்கும் என தெரிகிறது. சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் இருக்கும் என தெரிகிறது. இருந்தாலும் என்ஜின் குறித்த விவரங்கள் வரும் நாட்களில் விவரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

>பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில் 360 டிகிரி பார்க்கிங் கேமரா, ஆறு ஏர் பேக்ஸ், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்ஸ், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை இது கொண்டுள்ளது. 

>இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 19 லட்சம் முதல் 33 லட்ச ரூபாய் வரை இருக்கும் என தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com