'இந்தியாவில் ஆப்ரிக்கா' ஹோண்டா அறிமுகம் செய்யும் புது பைக் - இதில் என்ன ஸ்பெஷல்?

'இந்தியாவில் ஆப்ரிக்கா' ஹோண்டா அறிமுகம் செய்யும் புது பைக் - இதில் என்ன ஸ்பெஷல்?

'இந்தியாவில் ஆப்ரிக்கா' ஹோண்டா அறிமுகம் செய்யும் புது பைக் - இதில் என்ன ஸ்பெஷல்?

ஹோண்டா நிறுவனம் தனது இருசக்கர தயாரிப்புகளில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்களை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள 2022 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 

டியூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT), மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) என இரு வேறு வேரியண்ட்டுகளில் இந்த பைக் இந்திய சந்தைக்கு வந்துள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக ஹோண்டா அறிவித்துள்ளது. 1082.96சிசி லிக்விட் கூல்டு 4 ஸ்ட்ரோக் 8 வால்வ் பேரலல் ட்வின் எஞ்சினை இந்த பைக் கொண்டுள்ளது. 

2 சேனல் ABS, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, புது டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்க், அட்ஜெஸ்டபிள் சீட், டியூயல் டிஸ்க் பிரேக், ரேலி செல்வதற்கு ஏதுவாக இருக்கும் LCD திரை மாதிரியானவை இதில் உள்ளது. 

தற்போது இந்த பைக்கிறக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. வெள்ளை வண்ண ட்ரை கலரில் கிடைக்கும் MT மாடல் 16.01 லட்ச ரூபாய்க்கும், மேட் பிளாக்கில் கிடைக்கும் DCT மாடல் 17.56 லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com