2021 கேடிஎம் RC 200, RC 125 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் - சிறப்பம்சங்கள் என்ன?

2021 கேடிஎம் RC 200, RC 125 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் - சிறப்பம்சங்கள் என்ன?
2021 கேடிஎம் RC 200, RC 125 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் - சிறப்பம்சங்கள் என்ன?

கேடிஎம் ஆட்டோ நிறுவனத்தின் நியூ ஜெனெரேஷன் RC சீரிஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளன. கடந்த ஆகஸ்ட் வாக்கில் உலகளவில் RC சீரிஸ் அறிமுகமாகி இருந்தது. தற்போது RC 125 மற்றும் RC 200 பைக்குகள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. விரைவில் RC 390 பைக்கும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது இந்த பைக்குகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அட்ஜஸ்டபுள் ஹேண்டில் பார், 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், புதுவிதமான விண்ட் ஸ்கிரீன், பெரிய அளவிலான ஏர் பாக்ஸ், ஸ்ப்ளிட்-ஸ்டீல் Trellis ஃப்ரேம், புதிய டெயில் லைட் டிசைன், வளைந்த வடிவிலான ரேடியேட்டர், BS6 என்ஜின், சிக்ஸ் ஸ்பீட் கியர் பாக்ஸ், டியூயல் சேனல் ABS, டியூயல் டிஸ்க் பிரேக் மாதிரியானவற்றை இந்த பைக்குகள் கொண்டுள்ளன. இதில் சில அம்சங்கள் முதல் ஜெனரேஷன் கேடிஎம் பைக்குகளிலிருந்து இந்த புதிய சீரிஸ்களை வேறுபடுத்தி காட்டுகின்றன. 

இந்தியாவில் கேடிஎம் அறிமுகமாகி பத்து ஆண்டு காலம் ஆகியுள்ளதால் இந்த புதிய சீரிஸ் பைக்குகள் சலுகை விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. RC 125 - 1.82 லட்ச ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலைக்கும், RC 200 - 2.09 லட்ச ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலைக்கும் விற்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com