4.5 விநாடிகளில் 100 கிமீ வேகம் - ஆடி S5 ஸ்போர்ட் பேக் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

4.5 விநாடிகளில் 100 கிமீ வேகம் - ஆடி S5 ஸ்போர்ட் பேக் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
4.5 விநாடிகளில் 100 கிமீ வேகம் - ஆடி S5 ஸ்போர்ட் பேக் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ஆடி S5 ஸ்போர்ட் பேக் காரின் சிறப்பம்சங்களை இந்தக் கட்டுரைத் தொகுப்பில் காணலாம்

ஆடி எஸ்5 ஸ்போர்ட் பேக் கார் 2019-ஆம் ஆண்டு பிராங்பேர்ட் மோட்டார் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 79.06 லட்சத்திற்கு விற்கப்படும் S5 ஸ்போர்ட்பேக் கார், 3 லிட்டர் v6 TFSI டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இந்த மோட்டாருடன் 8 ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் மற்றும் குவாட்ரோ ஆல்-வீல்-டிரைவ் இணைக்கப்பட்டுள்ளது. வண்டியை ஆன் செய்தவுடன் 4.5 விநாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டக்கூடும் இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ.

S5 ஸ்போர்ட் பேக் காரில் 5 இருக்கைகள், காரில் பின்னால் பொருட்களை வைத்துக்கொள்வதற்கான வசதி, 19 இன்ச் அலாய் சக்கரங்கள், எல்.இ.டி வசதியுடன் கூடிய ஹெட் லேம்ஸ், டெய்ல் லைட்ஸ், 10.1- இன்ச் MMI infotainment, சிஸ்டம் விர்சுவல் காக்பிட், ப்ளாட் பாட்டம் ஸ்டியரிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இவைத்தவிர மூன்று வித கிளைமேட் கன்ரோல் வசதிகள், லெதர் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், Olufsen ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட வசதிகள் கார் சவாரியை இன்னும் சொகுசாக மாற்றுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com