“கடந்த ஏப்ரல் மாதம் 2.6 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” - NPCI தகவல்
கடந்த ஏப்ரல் மாதம் மட்டுமே 2.6 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது. மொத்தமாக சுமார் 4,93,663 கோடி ரூபாய் இந்த பரிவர்த்தனைகளின் மூலம் பதிவாகி உள்ளதாகவும் NPCI தகவல் அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது UPI பரிவர்த்தனையில் 1.4 சதவிகிதம் சரிவு ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் 50 பிளாட்பார்ம்களில் முதலிடம் பிடித்துள்ளது போன்பே தளம். மொத்தம் 1.18 பரிவர்த்தனைகள் போன்பேவில் பதிவாகி உள்ளது. மொத்தம் 2,34,203 கோடி ரூபாய் போன்பே தளம் கைமாறி உள்ளது.
அதற்கு அடுத்தபட்சமாக கூகுள் பே (1,90,106 கோடி), Paytm (41,468 கோடி), ஆக்ஸிஸ் பேங்க் அப்ளிகேஷன் (747 கோடி), அமேசான் பே (4,272 கோடி), எஸ் பேங்க் அப்ளிகேஷன் (5120 கோடி), BHIM அப்ளிகேஷன்கள் (6886 கோடி) அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.