ஆசிய-பசுபிக் பொருளாதார ஒப்பந்தம்: இந்தியா கையெழுத்திடவில்லை.  

ஆசிய-பசுபிக் பொருளாதார ஒப்பந்தம்: இந்தியா கையெழுத்திடவில்லை.  
ஆசிய-பசுபிக் பொருளாதார ஒப்பந்தம்: இந்தியா கையெழுத்திடவில்லை.   

ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா உள்பட 15 ஆசிய - பசிபிக் நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை.

ஆசியான் நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. மாநாட்டின் முடிவில் ஆர்சிஇபி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், தென்கிழக்கு ஆசிய நாட்டுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருணே, வியட்நாம், லாவோஸ், மியன்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. அதேபோல, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ஆசிய- தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் சில பொருட்களுக்கு வரியை ரத்து செய்வதால் உள்ளூர் சந்தைகளில் வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் குவிந்துவிடும் என்றும், இது உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிக்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையின்போது, உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள சில பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com