புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2023 - ட்ராபியை அறிமுகம் செய்தார் இயக்குநர் சேரன்!

புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2023 ட்ராபி அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
தமிழன் விருதுகள் ட்ராபி அறிமுக விழா
தமிழன் விருதுகள் ட்ராபி அறிமுக விழாpt web

சாதனைத் தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் அவர்களைக் கொண்டாடும் விதமாகவும் புதிய தலைமுறை தமிழன் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டமான 2 ஆண்டுகளைத் தவிர்த்து தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்த புதிய தலைமுறை தமிழன் விருதுகள் தற்போது 10 ஆவது ஆண்டை எட்டியுள்ளது.

எழில்மிகு தமிழகம் படைக்க உழைத்துக் கொண்டிருக்கும் சாதனையாளர்களையும், நம்பிக்கை நட்சத்திரங்களை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் தமிழன் விருதுகள் என்ற பெயரில் 6 பிரிவுகளில் சாதனையாளர்களையும் நம்பிக்கை நட்சத்திரங்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு தமிழன் விருதுகள் வழங்கி கௌரவித்துக் கொண்டிருக்கிறது புதிய தலைமுறை. அந்த வரிசையில் இந்தாண்டும் 10 ஆவது ஆண்டு தமிழன் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இவ்விழா ஆகஸ்ட் 11 வெள்ளி மாலை 6 மணிக்கு, சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இன்று (04/08/23) விருதுக்கான ட்ராபி அறிமுக விழா தலைமை செயல் அதிகாரி ராஜாமணி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிய தலைமுறையின் செய்தி பிரிவு செயல் ஆசிரியர் திருப்பதி வரவேற்புரையாற்றினார்.

செய்தி இயக்குநர் ஸ்ரீநிவாசன் சிறப்புரை ஆற்றினார். புதிய தலைமுறையின் நிகழ்ச்சி பிரிவு செயல் ஆசிரியர் கார்மல் தமிழன் விருதுகள் 2023 பற்றி உரையாற்றினார். நிகழ்ச்சி திட்ட இயக்குநர் செல்வகுமார் மற்றும் மடோனா ஜனனி ஆகியோர் தமிழன் விருதுகள் 2023ன் கருப்பொருளை விளக்கினர்.

இந்நிகழ்வில் நடிகரும் இயக்குநருமான சேரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 ஆவது ஆண்டுக்கான தமிழன் விருதுகள் ட்ராபியை வெளியிட்டு சிறப்பித்தார்.

சாதனைத் தமிழர்களை கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது புதிய தலைமுறை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com