புதிய தலைமுறை சக்தி விருதுகள்
புதிய தலைமுறை சக்தி விருதுகள்புதிய தலைமுறை

Sakthi Awards |புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2025

Accelerate actions towards achieving gender equality
Published on

'உண்மை உடனுக்குடன்' என்ற தாரக மந்திரத்துடன் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நமது புதிய தலைமுறை செய்தி அலைவரிசை ஊடகப் பணியாற்றி வருகிறது. செய்திப் பணியையும் தாண்டி மக்கள் பணியாற்றுவதை கடமையாக கொண்டிருக்கும் புதிய தலைமுறை இந்த சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் விதமாக தமிழன் விருதுகள், சக்தி விருதுகள் மற்றும் ஆசிரியர் விருதுகள் என்று ஆண்டுதோறும் மூன்று விதமாக விருது விழாக்களை நடத்தி சிறப்பு செய்து வருகிறது.

சமூகம் தளைக்க பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கு சக்தி விருதுகள் #sakthiawards வழங்கப்பட்டு வருகின்றன. தலைமை, திறமை, துணிவு, புலமை, கருணை மற்றும் வாழ்நாள் சாதனை என்ற ஆறு தலைப்புகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கான பரிந்துரைகள் நடுவர் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு அதிலிருந்து சிறந்தவர்கள் ஆண்டுதோறும் விருதாளர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

தேர்வு செய்யப்படும் விருதாளர்கள் பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் சனிக்கிழமை மாலை சென்னையில் நடைபெறும் மாபெரும் விழாவில் விருதுகளை பெற இருக்கின்றனர். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாலை ஆறுமணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர்கள், தொழில்முறை வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ள இருக்கின்றனர்.

வண்ணமிகு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் நடக்க இருக்கும் சக்தி விருதுவிழா நிகழ்ச்சி மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் நாள் அன்று நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com