71 ஆவது உலக அழகிப்போட்டி; மகுடம் சூடினார் செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா!

71ஆவது உலக அழகி போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா மகுடம் சூடியுள்ளார்.

28 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற்றது. கடந்த மாதம் 18ஆம் தேதி டெல்லியில் தொடங்கிய 71ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்று மும்பையில் நேற்று இரவு நடந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 117 பேர் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவைச் சேர்ந்த சினி ஷெட்டி உள்ளிட்ட 14 பேர் தகுதி பெற்றனர்.

இந்நிலையில், செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, 2024ஆம் ஆண்டுக்கான 71ஆவது உலக அழகி பட்டத்தை வென்றார். இரண்டாவது இடத்தை லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் பிடித்தார். வெற்றி பெற்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவிற்கு 2021ஆம் ஆண்டு பட்டம் வென்ற போலாந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தை சூட்டினார். இந்தியா சார்பில் பங்கேற்ற சினி ஷெட்டி, 2022ஆம் ஆண்டுக்கான இந்திய அழகி பட்டத்தை வென்றவர். இவர் உலக அழகி போட்டியின் டாப் 8 பிரிவில் இடம்பெற்றார். உலக அழகி போட்டி நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு திரைத்துறை பிரபலங்கள், மாடல்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com