உலகம்

வேகமாக பரவும் காலரா - ஜிம்பாப்வேயில் 49 பேர் உயிரிழப்பு

rajakannan

ஜிம்பாப்வேயில் காலராவுக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் காலராவால் இதுவரை 49 பேர் உயிரிழந்திருப்பதால், நோய் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக புறநகர் பகுதிகளில் நோய் பரவாமல் இருக்க, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களை மறுசீரமைக்கவும், தடுப்பூசிகள், மருந்துகளை வாங்கவும் பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும் என ஜிம்பாப்வே அரசு கேட்டுக் கொண்டுள்ளது.