பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து நெதர்லாந்தை சேர்ந்த யூடியூபர், கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தடகள வீரர் அர்ஜென் ஆல்பர்ஸுடன் இணைந்து யூடியூப் சேனலை நடத்தி வரும் ஸ்டான் பிரவுனி, கடந்த ஜூலை 6 ஆம் தேதி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் உள்ள ஹோவெனென் ஏர்ஃபீல்டில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஸ்டான் பிரவுனியின் கின்னஸ் சாதனை வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளது. முந்தையை இரு சாதனைகளையும் முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.