model image Google gemeni
உலகம்

ஏமன் போர் | சவூதிக்கு உதவி.. நெருங்கும் பெரிய ஆபத்து.. தானாய்ச் சிக்கிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் இந்த ராணுவ நடவடிக்கை, ஹவுதிகளுக்கு ஆதரவளிக்கும் ஈரானை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், சவூதிக்கு உதவும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

Prakash J

சவூதி அரேபியா மற்றும் ஏமனின் ஹவுதி (Houthi) கிளர்ச்சியாளர்களுக்கு இடையேயான போரில், தற்போது மெக்கா ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானும் உள்ளே நுழைந்துள்ளது. இந்தப் போர், பாகிஸ்தானின் 'வியட்நாமாக' மாறுமா எனக் கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் ஏமனில் சவூதிக்கு ஆதரவாகச் செயல்படும்போது, அது மறைமுகமாக ஈரானை எதிர்ப்பதாக அமைகிறது.

ஏமன் போர் | ஹவுதி - சவூதி இடையே தாக்குதல்

ஏமனில் உள்நாட்டுப் போர் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஈரான் ஆதரவு ஹவுதி படைகளுக்கும் ஏமன் அரசு ராணுவத்திற்கும் இடையே சண்டை தொடர்ந்தது. இடையில் 2022ஆம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், தற்போது அது மேலும் தீவிரமடைந்துள்ளது. ஏமனில் ஒரு பகுதியில் இருக்கும் ஹவுதி அமைப்பினர், அந்நாட்டில் உள்ள பிற பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் தற்போது அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர். கட்ந்த மாத தொடக்கத்தில், ஹவுதிகள் ஏமன் கடற்கரையோரமாக முன்னேறி, முக்கிய துறைமுக நகரமான மோக்காவையும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் தீவுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றி, அவர்களுக்கு உலகின் வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் வழக்கமாக கடந்து செல்லும் பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் முற்றுகையிடும் அளவுக்கு பெருகியுள்ளது. இதைவைத்து அவர்கள் மிரட்டலும் விடுத்துவருகின்றனர். இதனால், சவூதி அரேபியாவின் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Model image

இந்தச் சூழலில்தான் துருக்கி, பாகிஸ்தான், சவூதி அரேபியா இடையே மெக்கா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, துருக்கியும் பாகிஸ்தானும் இணைந்து ஹவுதியைத் தாக்கி வருகின்றன. ஆனாலும் பதிலுக்கு ஹவுதியும் தாக்கி வருகிறது. இதில் சவூதிதான் பலிகடாவாகி வருகிறது. பாகிஸ்தானின் இந்த ராணுவ நடவடிக்கை, ஹவுதிகளுக்கு ஆதரவளிக்கும் ஈரானை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், சவூதிக்கு உதவும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஏமன் பாகிஸ்தானின் 'வியட்நாமாக' மாறுமா?

இதற்கிடையே, ஏமன் பாகிஸ்தானின் 'வியட்நாமாக' மாறுமா எனக் கேள்வி எழுந்துள்ளது. ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நிதியும் ஆயுதமும் அளிக்கிறது. பாகிஸ்தான் ஏமனில் சவூதிக்கு ஆதரவாகச் செயல்படும்போது, அது மறைமுகமாக ஈரானை எதிர்ப்பதாக அமைகிறது. பாகிஸ்தான் ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்வதால், ஏமன் விவகாரம் பாகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய சூழலில்தான், அமெரிக்கா வியட்நாம் போரில் மாட்டிக்கொண்டு மீள முடியாமல் பெரும் இழப்புகளைச் சந்தித்ததுபோல, பாகிஸ்தான் ஏமன் போரில் நேரடியாகவோ ஆழமாகவோ இறங்கினால் அது பாகிஸ்தானின் 'வியட்நாமாக' மாறக்கூடும் எனத் தகவல்கள் கூறுகின்றன.

Model image

ஹவுதிகளை எதிர்ப்பது ஈரானைப் பகைத்துக் கொள்வதற்குச் சமம். இது பாகிஸ்தான்-ஈரான் எல்லையில் மோதல்களை உருவாக்குவதுடன், அந்நாட்டில் வாழும் இருதரப்பு மக்களிடையே மதப் பதற்றத்தையும் பிளவையும் உண்டாக்கும் என நம்பப்படுகிறது. அடுத்து, வியட்நாமின் அடர்ந்த காடுகளுக்குள் அமெரிக்க ராணுவத்தால் இயல்பாகப் போரிட முடியாமல் திணறியது போலவே, ஏமனின் செங்குத்தான கரடுமுரடான மலைப் பகுதிகளில் எகிப்திய ராணுவத்தால் திறம்படச் செயல்பட முடியாமல் போனது.

மேலும், இந்தப் போரில் சுமார் 10,000 முதல் 20,000 எகிப்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். போரைத் தொடர்ந்து நடத்த நாசரின் அரசு தினமும் லட்சக்கணக்கான டாலர்களைச் செலவிட்டதால், எகிப்தின் பொருளாதாரம் கடுமையாகச் சீரழிந்தது. ஆகையால், அமெரிக்கா, சவூதி போன்ற வல்லரசுகளின் வான்வழித் தாக்குதல்களையே முறியடித்து நிற்கும் ஹவுதிகளைத் தரைப்படை மூலம் தோற்கடிப்பது பாகிஸ்தானுக்கு சாத்தியமில்லாத ஒன்றாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், வியட்நாம் போர் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்தது. பாகிஸ்தான் ஏற்கெனவே கடும் கடன் நெருக்கடியிலும் பணவீக்கத்திலும் தவிக்கிறது.

Model image

சொந்த நாட்டு எல்லைகளைத் தாண்டி ஏமன் போர்க்களத்தில் படைகளைப் பராமரிப்பதும் போரிடுவதும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கிவிடும். தவிர, பாகிஸ்தான் தனது ஆப்கானிஸ்தான் எல்லையில் தெஹ்ரிக்-இ-தாலிபான் (TTP) போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் ஏற்கெனவே போரிட்டு வருகிறது. இந்த நிலையில், ஏமன் போரில் கவனம் செலுத்துவது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தும் எனக் கருதப்படுகிறது. இதுபோன்ற காரணங்களாலேயே பாகிஸ்தான் தற்போது வியட்நாம் போருடன் ஒப்பிடப்படுகிறது.