உலகம்

உலகின் நீளமான ‘ராக்’ விமானத்தின் முதல் பயணம்

webteam

உலகிலேயே மிகவும் நீளமான விமானம் கலிபோர்னியாவில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.

உலகிலேயே மிகவும் நீளமான ‘ராக்’(Roc) என்ற விமானத்தை ‘ஸ்டர்டோ லான்ச்’(stratolaunch) நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விமானம் இரண்டு விமானங்களின் உடற்பகுதிகளை கொண்டது. அத்துடன் 6 போயிங் 747 விமானங்களின் இயந்திரங்களை கொண்டுள்ளது. இந்த விமானம் விண்வெளியில் செயற்கைகோள் ஏவுவதற்காக ராக்கெட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டது. ஏனென்றால் இதன்மூலம் எளிதில் ஓடுபாதை மட்டும் வைத்து செயற்கைகோள்களை இயக்க முடியும்.

இந்நிலையில், இந்த நீளமான விமானம் இன்று கலிபோர்னியாவின் மோஜேவ் பாலைவனத்தில் முதல் முறையாக இயக்கப்பட்டது. இவ்விமானம் மொத்தம் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் பறந்தது. இந்த விமானம் அதிகபட்சமாக மணிக்கு 304 கிலோமீட்டர் வேகத்தில் சென்று பூமியிலிருந்து 17ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது. இந்த விமானம் உள்ளுர் நேரப்படி காலை 7 மணிக்கு இயக்கப்பட்டது. 

இதுகுறித்து இந்த விமானத்தை தயாரித்த நிறுவனத்தின் சிஇஒ ஜீன் ஃபிலாய்ட், “இது மிகவும் அருமையான பயணம். இன்றைய பயணம் ஒரு பெரிய முயற்சியின் தொடக்கம்” என தெரிவித்தார். இந்த விமானத்தின் விங் ஸ்பேன் 117 மீட்டர். அதாவது ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தின் அளவை உடையது.