உலகிலேயே மிகப்பெரிய மாம்பலத்தை கொலம்பியா விவசாயிகள் பயிரிட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.
கொலம்பியாவைச் சேர்ந்த விவசாயிகளான ஜெர்மன் ஆர்லாண்டோ நோவோவா பரேரா மற்றும் ரீனா மரியா மரோகுயின் ஆகியோர் கொலம்பியாவின் குயாட்டாவின், பாயாகா பகுதியில் உள்ள சான் மார்டின் பண்ணையில் இந்த மாம்பலத்தை விளைவித்துள்ளனர்.
தொடக்கத்தில் மாம்பலத்தை பயிரிட்ட இந்தத் தம்பதிக்கு மாம்பழத்தின் வித்தியாசமான வளர்ச்சி ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இதனையடுத்து இவர்களது மகள் டேபேஜி இணையதளத்தில் தேடி பார்த்துள்ளார். அப்போது உலகத்திலேயே இவ்வளவு பெரிய மாம்பலம் இல்லை என்பது தெரியவந்தது.
இது குறித்து ஜெர்மன் கூறும் போது, “ எங்களது குறிக்கோள் இந்தச்சாதனை மூலம் கொலம்பியா மக்களின் கடின உழைப்பு, கிராமங்களின் மீது மக்கள் கொண்டுள்ள அன்பு ஆகியவற்றிற்கு நிலம் தந்த பலன்களை தந்ததை காண்பிக்க வேண்டும் என்பதே. தொற்று நோய் பரவி வரும் இந்தக் காலத்தில் இந்தச் செய்தி எங்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
இந்தக் கின்ன்ஸ் சாதனை விருது, குயாதுனோ கிராப்புற மக்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. நிலத்தின் மீதான இந்தக்காதல் எங்கள் பெற்றோரால் சொல்லிக்கொடுக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு உலகிலேயே இயற்கை மலர் கம்பளத்தை செய்ததற்காக கின்னஸ் சாதனையை படைத்திருந்தது. அதன் நீளம் 3,199 ஸ்கொயர் மீட்டர் ஆகும்” என்றார்.
கின்ன்ஸ் சாதனை பதிவு செய்யப்பட்ட பிறகு ஜெர்மன் ஆர்லாண்டோ குடும்பத்தினர் மாம்பழத்தை வெட்டி உண்டு மகிழந்தனர்.
குயாட்டாப்பகுதியில் மாம்பலங்கள் மிகச்சிறிய எண்ணிக்கையிலேயே கிடைக்கின்றன. குயாட்டாப் பகுதியில் பொதுவாக காபி தயாரிப்பிற்கான பொருட்கள் பயிரிடப்படுகின்றன.