வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்ய மக்களின் பசியை தீர்க்கும் பணியில் பல்வேறு சர்வதேச தொண்டு அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
வங்கதேசத்தில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்ய இஸ்லாமிய மக்களின் பசியைப் போக்க சர்வதேச உணவு அறக்கட்டளை முன்வந்துள்ளது. அடைக்கலம் புகுந்துள்ள அனைத்து ரோஹிங்ய மக்களுக்கும் உணவு வழங்க முடியாவிட்டாலும், நாள்தோறும் 86 ஆயிரம் பேருக்காவது உணவு வழங்கப்படும் என அந்த அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் நுஹமது மஹதி தெரிவித்துள்ளார்.
மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு அடைக்கலமாக வரும் ரோஹிங்ய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் ரோஹிங்ய மக்களின் துயர் தீர்க்கும் பணியில் பல்வேறு சர்வதேச அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.