உலகம்

‘புதிய நோய் தடுப்பு கருவிகளுக்காக குறைந்தது 100 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டும்' WHO

EllusamyKarthik

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் அதிதீவிரமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா முன்னிலையில் இருந்து வருகின்றன. 

உலகளவில் கொரோனாவினால் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவுடன் போராடுவதற்கான புதிய கருவிகளுக்காக உலகம் குறைந்தபட்சம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலகம் செலவிட வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார் உலக பொது சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்.

‘கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு புதிய நோய் தடுப்பு மருந்து மற்றும் கருவிகளுக்காக உலகம் குறைந்தது 100 பில்லியன் அமரிக்க டாலர்களை செலவழிக்க வேண்டும். இதில் முதல் மற்றும் உடனடி தேவையாக ACT கருவிகளுக்காக 31.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலக நாடுகள் செலவிட வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.