video thumbnail PT
உலகம்

வரலாற்றில் இதுபோன்று இல்லை... உலக வானிலை மையத்தின் அறிக்கை விடுக்கும் எச்சரிக்கை

வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 2023ம் ஆண்டில் தான் பருவநிலை மாற்றம் தொடர்பான பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

PT WEB

வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 2023 ம் ஆண்டு பருவநிலை தொடர்பான மாற்றங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான வருடாந்திர கூட்டம் துபாயில் நடந்து வருகிறது. இதில் பருவநிலை மாற்றம் குறித்த விரிவான அறிக்கையை உலக வானிலை மையம் சமர்பித்துள்ளது. உலகின் சராசரி வெப்பநிலை கடந்த 150 ஆண்டுகளில், 1.4 % அதிகரித்துள்ளாதாகவும் 2023ம் ஆண்டுதான் உலகிலேயே வெப்பம் மிகுந்த ஆண்டாக இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.