உலகம்

"ஆப்கான் அரசை அங்கீகரிக்காவிடில் உலகிற்கே பிரச்னை" - எச்சரிக்கும் தலிபான் தலைவர்கள்

"ஆப்கான் அரசை அங்கீகரிக்காவிடில் உலகிற்கே பிரச்னை" - எச்சரிக்கும் தலிபான் தலைவர்கள்

Veeramani

ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்காவிட்டால் உலகிற்கே பிரச்னை ஏற்படும் என்று அமெரிக்க அரசை தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் இடைக்கால அரசை உருவாக்கியுள்ளனர். இதற்கு சீனா, பாகிஸ்தான் தவிர வேறு எந்த நாடும் ஆதரவு அளிக்கவில்லை. இவ்விரு நாடுகளும் தலிபான் அரசுக்காக உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அரசை அங்கீகரிக்க தவறுவது ஆப்கானிஸ்தானில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தும் என்றும், பின்னர் இது உலகிற்கே பிரச்னையாக மாறும் என்றும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.