மெக்சிகோவை கடந்த வாரம் புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து அந்நாட்டு மக்கள் மெல்ல மீண்டு வருகின்றனர். குறிப்பாக பெண்களே களத்தில் இறங்கி இடிபாடுகளை அகற்றி மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரிக்டர் அளவில் 8.1 ஆக பதிவான இந்த பூகம்பத்தால் மெக்சிகோவின் பல்வேறு மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. மின் இணைப்பு, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மக்கள் இருளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பூகம்பத்தால் ஜூசிதான் பகுதியில் சரிந்து விழுந்த கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் பெண்களும் களமிறங்கியுள்ளனர். அவர்களுடன் மூன்றாம் பாலினத்தவரும் கைகோர்த்திருப்பதால் மீட்புப் பணிகள் அங்குமுழு வீச்சில் நடந்து வருகின்றன.