உலகம்

காதலனுக்காக 30 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த தியாகப் பெண்...!!

காதலனுக்காக 30 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த தியாகப் பெண்...!!

webteam

ஹாங்காங் நகரில் வசிக்கும் பெர்ரி என்ற 22 வயது பெண். காதலனை கவர்வதற்காக 30 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் முகத் தோற்றத்தை மாற்றியுள்ளார். இதற்காக கடந்த 5 ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.

பெர்ரி தன் காதலனை முதல் முறையாக சந்தித்தபோது அவரின் தோற்றத்தை கண்டு கிண்டல் செய்துள்ளார் காதலர். இதனால் காதலனுக்கு பிடித்தவாறு தன் தோற்றத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் பெர்ரி. பின், அதுவே வழக்கமாகிவிட, மொத்தமாக 30 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இருப்பினும் அவர் காதலனுக்கு பெர்ரி மிது கடைசி வரை ஈர்ப்பு வரவில்லை என்பது சோகமே. இறுதியில் தொடர்ந்து குறைகள் சொல்லி பெர்ரியை பிரிந்தார் காதலன். இப்போது தன் தோற்றத்தை மற்றியதற்க்கு வருத்தப்பட்டு மன உளைச்சலில் இருக்கிறார் பெர்ரி.