அமெரிக்கா
அமெரிக்கா முகநூல்
உலகம்

அலறல் சத்தம்..மாயமான 7 ஆண்டுகளுக்குபின் மோட்டல் ரூமில் மீட்கப்பட்ட பெண்! அமெரிக்காவில் நடந்த சம்பவம்

ஜெனிட்டா ரோஸ்லின்

அமெரிக்காவில் 7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண் ஒருவர் மோட்டல் அறையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

எங்கள் பெண்ணை யாரோ அடைத்து வைத்திருக்கிறார்கள். அவரை காப்பாற்றுங்கள் என்று போலீசாருக்கும் போன் வந்துள்ளது. போன் செய்தவர் அந்தப்பெண்ணின் மாற்றான் தாய்.

தற்போது 30 வயதாகும் காணாமல் போன பெண், சரியாக 2017 ஆம் ஆண்டு தொலைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெகு நாட்களாக இந்த பெண் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தன் மாற்றான் தாயிக்கு தொடர்பு கொண்ட அப்பெண், தன்னை வழுக்கட்டாயமாக மோட்டலில் (பயணம் செய்பவர்களுக்கான ரெசிடென்சி) அடைத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதன் பிறகு காவல்துறைக்கு இது குறித்த தகவல் கிடைக்கவே, விசாரணை மேற்கொண்ட போலீசார், காணாமல் போன பெண் மிச்சிகனின் உள்ள எவர்கிரீன் மோட்டலில் அடைத்து வைக்கப்பட்டதை அறிந்தனர்.

இந்நிலையில், அந்த மோட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் , அப்பெண்னை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.அபோது அலறலுடன் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதன்பிறகு அவ்விடத்திற்கு சென்று அப்பெண்ணை மீட்டனர்.

மேலும் அப்பெண் இருந்த அறையை சோதனை செய்து பார்த்ததில் போதைப்பொருள்கள், துப்பாக்கிகள் கிடைத்துள்ளது. இருப்பினும், அந்த பெண் உடலளவில் எந்த பாதிப்பும் இல்லாமல் காணப்பட்டுள்ளார். இதனை அடுத்து அப்பெண் மீட்கப்பட்டு அவரது வீட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீட்கப்பட்டுள்ள பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மீட்கப்பட்ட பெண் குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.