உலகம்

நீளமான நாக்கு: சமூக வலைதளம் மூலம் வருமானம் அள்ளும் இளம் பெண்!

நீளமான நாக்கு: சமூக வலைதளம் மூலம் வருமானம் அள்ளும் இளம் பெண்!

webteam

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு விஷயத்துக்காக சிலர் பிரபலமாகிறார்கள். அதன் மூலம் சிலர் அதிகமான பாலோயர்களையும் பணத்தையும் சம்பாதிக்கிறார்கள். அப்படி ஒரு பெண், தனது நாக்கு காரணமாக பிரபலமாகி இருக்கிறார் சமூக வலைதளத்தில். அவர் பதிவிடுகிற வீடியோ மூலம் இந்த வருடம் மட்டும், 70 லட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறார். 

அவர், மிகல்யா சரவியா (21). அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச்சை சேர்ந்த இவருக்கு மற்றவர்களை விட நீளமான நாக்கு. வழக்கமாக எல்லோருக்கும் இருப்பதை போல அல்லாமல், நீளமாகவே இருக்கிறது. அதாவது 6.4 இன்ச் நீளம்! இதன் காரணமாகவே மிகல்யா சமூக வலைதளத்தில் பிரபலமாகி இருக்கிறார். இவரை சுமார் 20 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

தனது நாக்கு மற்றும் நடனம் தொடர்பான வீடியோக்களை இதில் பதிவிடும் இவருக்கு விளம்பரங்கள் மூலம் வருமானம் குவிகிறது. கடந்த வருடம் 35 லட்சம் ரூபாய் சம்பாதித்திருந்த அவர், இந்த வருடம் 70 லட்சத்தைத் தொட்டிருக்கிறார். 
‘ மற்றவர்களை விட நீளமான நாக்கு இருப்பதை எனது சிறுவயதில் அறிந்தேன். அது எனக்கு வருமானத்தை தந்துகொண் டிருக்கிறது. எனது பிசினஸ் இப்போது சிறப்பாக செல்கிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் என் வருமானம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது’ என்கிறார் மிகல்யா