உலகம்

ஒரு செல்ஃபியால் ஒரு கோடி ரூபாய் நஷ்டம்

ஒரு செல்ஃபியால் ஒரு கோடி ரூபாய் நஷ்டம்

webteam

அமெரிக்காவில் செல்ஃபி எடுக்கும்போது ஒரு பெண் தவறுதலாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கலைப்பொருட்களை தட்டிவிட்டு உடைத்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 14வது கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல பார்வையாளர்கள் கலந்து கொண்டு அங்குள்ள ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்கள் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்த கலைப்பொருட்கள் முன் நின்று பெண் ஒருவர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக ஒரு பொருளை தள்ளி விட்டதில் வரிசையாக இருந்த அனைத்து கலைப்படைப்புகளும் கீழே விழுந்தன. அதில் மூன்று படைப்புகள் முழுமையாக உடைந்து விட்டதாக அக்கண்காட்சியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் மதிப்பு சுமார் 2 இலட்சம் டாலர்கள் (சுமார் ஒரு கோடி ரூபாய்) என்று தெரிவித்துள்ளனர். செல்ஃபி எடுத்ததால் 2 இலட்சம் டாலர்கள் இழப்பு ஏற்படுத்தியதை எண்ணி அப்பெண் மிகவும் சோகத்தில் உள்ளார்.