போர்சுக்கல் தலைநகர் லிஸ்பன் கடற்கரை பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதில் சிறுமி உள்பட இருவர் உயிரிழந்தனர்.
போர்சுக்கல் தலைநகரம் லிஸ்பனில் கெபாரிகா என்ற கடற்கரையில் சிறிய ரக விமானம் ஒன்று மெதுவாக கீழிறங்கியது. அந்த விமானம் மீண்டும் மேல் நோக்கி பறந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் கூட்டத்துக்கு நடுவில் தரை இறங்கியது. யாரும் எதிர்பாராத நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் கடற்கரையில் இருந்த மக்கள் கடல் நீருக்குள் ஓடி உயிர் தப்பினர்.
விமானம் மோதியதில் கடற்கரையில் இருந்த 8 வயதுடைய சிறுமியும் மற்றும் 50 வயது நபர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இயந்திரக் கோளாறு காரணமாக விமானத்தில் பழுது ஏற்பட்டதால் தவிர்க்க முடியாத நிலையில் வேறு வழியில்லாமல் கடற்கரையில் தரை இறக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.