கியூபாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அந்நாட்டு அதிபர் ரால் காஸ்ட்ரோ வாக்குப்பதிவு செய்தார்.
வரும் 2018 பிப்ரவரியில் அதிபர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ள ரால் காஸ்ட்ரோ, புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தலைநகர் ஹவானாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். இந்தத் தேர்தலை தொடர்ந்து 614 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் கியூபாவின் முதல் துணை அதிபராக மிக்யூயெல் டயஸ் கேனல் (MIGUEL DIAZ CANEL) பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.