உலகம்

இளம் சூழலியலாளர் கிரேட்டா தன்பெர்க்கிற்கு சிலை வைத்த பிரிட்டன் பல்கலைக்கழகம்!

இளம் சூழலியலாளர் கிரேட்டா தன்பெர்க்கிற்கு சிலை வைத்த பிரிட்டன் பல்கலைக்கழகம்!

Sinekadhara

பிரிட்டனில் உள்ள வின்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சூழலியலாளரான கிரேட்டா தன்பெர்க்கின் முழு உருவசிலை நிறுவப்பட்டுள்ளது.

23,760 யூரோ செலவில் இந்த சிலையை நிறுவியதில் மாணவர்கள் சங்கத்தின் பங்களிப்பும் இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி நிர்வாகம் மாணவர்களுக்கு அனுப்பிய இமெயிலில் கிரேட்டாவை ஒரு சர்ச்சைக்குரிய நபராக பார்த்தாலும், அவருடைய விவாதம் மற்றும் விமர்சன உரையாடல்கள் பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிரேட்டா பற்றி பல்கலைக்கழக வேந்தர் மெகன் பால் கூறியபோது, ‘’உலக அளவிலான பிரச்னைகளைப் பற்றி குரல் எழுப்பும், பெருமைக்குரிய இவர் அனைவருக்கும் ஓர் சிறந்த ரோல் மாடல். கொரோனா காரணமாக மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளுக்கு வருவதில்லை. இருப்பினும் சிலைபற்றி கூறியபோது, 23,760 யூரோ மாணவர்கள் மூலமாகக் கிடைத்தது.

கிரேட்டாவைபோல் மற்ற மாணவர்களும் சர்ச்சைக்குரிய பிரச்னைகளைப் பற்றிபேச முன்வரவேண்டும்’’ என்று கூறினார். பல்கலைக்கழகத்தின் இந்த செயல்குறித்து பலரும் தங்கள் பாராட்டுக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.