AUSTRALIAN MP AND HIS GIRL FRIEND  X - The Tatva
உலகம்

"WILL YOU MARRY ME?" நாடாளுமன்றத்தில் காதல் புரபோசல்! | நெகிழவைத்த MP-யின் செயல்!

தனது பிரியாவிடை உரையின்போது காதலிக்கு மோதிரம் அணிவித்து திருமணத்திற்கு புரபோஸ் செய்த ஆஸ்திரேலிய MP. 10 ஆண்டுகால காதலுக்கு நாடாளுமன்றத்தில் கிடைத்த அழகான அங்கீகாரம், ஒட்டுமொத்த சபையையும் நெகிழ வைத்தது.

PT WEB

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் MP ஜோர்டன் லென், தனது காதலியை 'Will you marry me?' என ப்ரொபோஸ் செய்த நெகிழ்ச்சியான தருணம், நாடாளுமன்றத்தை காதல் மன்றமாக மாற்றியது. நடாலி சம்மதம் தெரிவித்ததும், கைதட்டல்களும் உற்சாகமும் அரங்கத்தை நிரப்பியது.

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

இப்படி கூட ப்ரொபோஸ் செய்வார்களா? கையில் மோதிரத்தை வைத்து ப்ரொபோஸ் செய்த ஒரு MPயின் செயல் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் நெகிழ்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. கறாரான நாடாளுமன்றத்தையே காதல் மன்றமாக மாற்றிய இந்த அழகான தருணம் இப்போ இணையத்தையே காதல் MODE-க்கு அழைத்து சென்றிருக்கிறது

ஆஸ்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் ryde தொகுதியின் mp jorden len தனது பதவிக்காலம் முடிய இருப்பதால் பிரியாவிடை உரையை நிகழ்த்தி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த தன்னுடைய காதலி Natalie hisseyஐ நோக்கி உரையின் கடைசி கேள்வி கேட்கப் போவதாக கூறினார்.

MP JORDEN LEN

அடுத்த நொடியே, கையில் நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்த ஜோர்டன், காதலியைப் பார்த்து “Will you marry me?” என்று கேட்டு புன்னகையுடன் marriage propose செய்திருக்கிறார்.

துளியும் எதிர்பார்க்காத இந்த சர்ப்ரைஸால் நெகிழ்ந்த நடாலி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, அரங்கம் முழுவதும் கைதட்டல்களும் உற்சாகமும் எழுந்து நாடாளுமன்றத்தையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. உடனே காதலியிடம் சென்ற ஜோர்டன், மோதிரத்தை அணிவித்து, கட்டியணைத்து தனது காதலை வெளிப்படுத்தினார்.

NEW SOUTH WALES PARLIMENT

10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் இந்த ஜோடி, பல தடைகளைத் தாண்டி ஒன்றாகப் பயணித்ததாகவும், தனது வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களுக்கு நடாலியே முக்கியக்காரணம் என்றும் ஜோர்டன் உருக்கமாகப் பேசியிருக்கிறார். தனது வாழ்க்கையில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்பாராத காதல் ப்ரபோசலைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அந்த ஜோடியை வாழ்த்தினர். இதனைப் பார்த்த நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற சபாநாயகர் கிரெக் பைப்பர், இந்த 58-வது நாடாளுமன்றம் இனி “PARLIAMENT OF LOVE” என்று நினைவுகூரப்படும் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

MP JORDEN LEN PROPOSE IN PARLIMENT

அரசியல் உரையுடன் தொடங்கிய தருணம்.. ப்ரோபோசலாக மாறி ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் காதல் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி இருக்கிறது.