உலகம்

அமெரிக்காவுக்கு எதிரான கியூபாவின் நடவடிக்கைகளை மறக்கமாட்டேன் - ட்ரம்ப்

அமெரிக்காவுக்கு எதிரான கியூபாவின் நடவடிக்கைகளை மறக்கமாட்டேன் - ட்ரம்ப்

webteam

அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக எதிரிகளாக இருந்தன. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபாவின் தற்போதைய அதிபர் ரவுல்காஸ்ட்ரோவும் செய்த தொடர் முயற்சிகளால் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவில் சமாதானம் ஏற்பட்டது. 

ஒபாமா கியூபாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டார். இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இத்தகைய சூழலில், ஒபாமா அரசின் பல்வேறு திட்டங்களை ரத்து செய்து வரும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு கியூபா உடன் ஒபாமா அரசு கொண்டு வந்த புதிய அணுகுமுறையை அதிரடியாக நேற்று ரத்து செய்தது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததாவது, பனிப்போர் காலத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ரஷியாவுடன் இணைந்து கியூபா மேற்கொண்ட நடவடிக்கைகளை மறக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கியூப எதிர்ப்பு அணுகுமுறையை கையாள்கிறது என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. 

இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாஷிங்டன் மேற்கொண்டுள்ள நடவடிக்கை வருந்ததக்கது. கியூபாவுக்கு எங்களது ஆதரவு இருக்கும் என்பதை உறுதி செய்கிறோம். அமெரிக்காவின் புதிய அணுகுமுறை பனிப்போர் காலத்தை ஒத்திருக்கிறது என்று குறிப்பிடப்படுள்ளது.