உலகம்

கலிபோர்னியா காட்டுத்தீயால் மாறிப்போன ஒயினின் சுவை

webteam

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மக்களும் காட்டுயிர்களும் பாதிக்கப்பட்டதுடன், அந்தப் பகுதியில் தயாரிக்கப்படும் ஒயின் பானத்தின் சுவையே மாறியுள்ளது. பெரும் காட்டுத் தீயால் உருவான புகை பல கிலோ மீட்டர் தூரத்திற்குப் பரவியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


கலிபோர்னியா மாகாணத்தில் தரமான திராட்சப் பழங்கள் பிரபலம். இந்த திராட்சைகளைக் கொண்டு அங்கு விலையுயர்ந்த ஒயின் தயாரிக்கப்படுகிறது. இப்போது காட்டுத்தீயால் அந்தப் பானங்களின் சுவையே மாறிவிட்டது. புகையின் மணம் அதில் பரவியிருப்பதாக ஒயின் தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


"வழக்கமாக பல வகைகளில் ஒயின் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். ஆனால் இந்த முறை ஏற்பட்டுள்ள நஷ்டம் சீர்செய்யமுடியாத அளவிற்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது" என்கிறார் சிராக்கூஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் புராக் காசாஸ்.