Elephant
Elephant PT Desk
உலகம்

கழிவறைக் குழிக்குள் தவறிவிழுந்த காட்டு யானை... வெளியே வர போராடிய சோகம்! #Video

PT WEB

இலங்கையில் உள்ள அனுராதபுரம் மாவட்டம் எப்பாவல என்ற பகுதியில் உள்ளது மாவத்தவெவ என்ற கிராமம். இதை சுற்றி வனப்பகுதி உள்ள நிலையில், அங்கு சுற்றித்திரிந்த 25 வயதுடைய யானை ஒன்று, நேற்று கிராமத்திற்குள் நுழைந்து சுற்றியுள்ளது. அப்போது அங்கிருந்த ஒரு வீட்டின் கழிவறை குழிக்குள் தவறி விழுந்துள்ளது அது.

Elephant

தொடர்ந்து வெளியே வரமுடியாமல் போனதால் அங்கிருந்து கத்தியுள்ளது யானை. யானை போராடிய சத்தத்தை கேட்டு, அப்பகுதியில் மக்கள் அங்கே குவியத்தொடங்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எப்பாவல காவலர்கள் மற்றும் தலாவ வனத்துறை அதிகாரிகள், யானையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். காட்டு யானையின் பின்னங்கால்கள் இரண்டும் கழிவறைக்குழிக்குள் மாட்டிக்கொண்டதால் மீட்புப்பணி மிகவும் சவாலாகிவிட்டது.

இதற்கிடையே காட்டு யானையை பார்க்க ஏராளமானோர் அங்கு கூடியதால், பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே யானை உள்ளே சிக்கிக்கொண்டு மிகவும் சிரமப்பட்டது, காண்போர் நெஞ்சை உலுக்கிவிட்டது.

வனத்துறையினர், காவல்துறையினர், மீட்பு படையினர் எவ்வளவோ போராடிய போதும், சில மணி நேரங்களுக்கு யானையின் போராட்டம் நீடித்தது. யானையின் சத்தம், அங்கிருந்தோரை நிலைகுலையச் செய்தது. ஒருகட்டத்தில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கழிவறை குழியிலிருந்து வெளியேறிச் செல்லும் வகையில் யானைக்கு பாதை வெட்டிக்கொடுக்கப்பட்டது.

பாதை உருவாக்கிக்கொடுத்ததும், குழிக்குள் விழுந்த காட்டு யானை மகிழ்ச்சியாக துள்ளிக்குதித்து வெளியே வந்தது. தொடர்ந்து வனத்துறையினர் பத்திரமாக அதை வெளியேற்றினர்.

அந்தக் காட்சிகளை இங்கே காண்க: