உலகம்

'இணக்கம்' காட்ட முனையும் பாகிஸ்தான்: போர், அமைதி... இந்தியா விரும்புவது எதை?

'இணக்கம்' காட்ட முனையும் பாகிஸ்தான்: போர், அமைதி... இந்தியா விரும்புவது எதை?

webteam

இந்தியாவுடன் சுமுக உறவை ஏற்படுத்தி, ஒரு புதிய தொடக்கத்தை பாகிஸ்தான் விரும்புவது குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம் இது...

இஸ்லாமாபாத்தில் கடந்த வியாக்கிழமையன்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் அகமது பாஜ்வா உரையாற்றினார். பாதுகாப்பு தொடர்பாக நிகழ்த்திய 13 நிமிட உரையாடலில் அவரது பேச்சுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அவர் பேசுகையில், "இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த காலத்தை மறந்துவிட்டு, புதிய ஒரு தொடக்கத்தை உருவாக்க வேண்டும். இரு நாடுகளுக்கிடையேயான சமாதானத்தில் அவர்களுக்கும் (இந்தியா) பங்கு உண்டு. இதன்மூலம் அவர்கள் தங்கள் பொருளாதாரம் மற்றும் இன்ன பிற விஷயங்களில் கவனம் செலுத்த முடியும்" என்றார்.

ஒவ்வொரு பாகிஸ்தான் தலைவரும் ஒரு கட்டத்தில் கூறியது இதைத்தானே! பின்னர், முதுகில் குத்தும் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இதில் என்ன புதிதாக்க இருக்கிறது?

எதிர்கால செயல்திறனுக்கான ஒரே வழிகாட்டியாக கடந்த காலம் இருந்தால், பாகிஸ்தானைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. மென்மேலும் துப்பாக்கிகளையும் ஆயுதங்களையும் வாங்கிக் குவித்துவிட்டு எல்லையில் அமர்ந்திருந்தால், எப்படி நாம் முட்டுக்கட்டைகளை உடைத்தெறிய முடியும்?

கார்கில், பராக்ராம் மற்றும் புல்வாமா/பாலகோட் உள்ளிட்ட சம்பவங்களுக்குபிறகு என்ன நடந்தது என்பது நமக்கு தெரியும். 9/11 தாக்குதலை பயன்படுத்தி பாகிஸ்தானை வீழ்த்திவிடலாம் என்று புகழ் பெற்ற அமெரிக்க பாதுகாப்பு - தூதர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் கூட நினைத்தார். இது வெறும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்பதையும் அவர் அறிந்தேயிருந்தார்.

அதன்பிறகு 20 ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளில் அமெரிக்கா பலமுறை குண்டுவீசித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்கர்கள்தான் பின்னடைவை சந்திக்கிறார்கள். ராணுவ ரீதியாக, ராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக, பலத்தால் எதையும் அடைவது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் வி.பி.மாலிக் இந்த மாத தொடக்கத்தில் 'தி பிரின்ட்' செய்தி நிறுவனத்தின் 'ஆஃப் தி கஃப்' நிகழ்ச்சியில் என்னுடன் நடந்த உரையாடலின்போது, "ராணுவ சக்தியால் நமது பிராந்திய பகுதிகளை அடைய முடியும் என்பது சாத்தியமில்லாத ஒன்று" என்று கூறினார். இதுபோன்ற எந்தவொரு சாகசமும் உடனடியாக உலகளாவிய மறுப்புக்குள்ளாகும்.

"நீங்கள் சில மைல்கள் முன்னேறுவதைவிட ஒரு போர் நிறுத்தத்தை வலியுறுத்துங்கள்" - இவை எனது வார்த்தைகள், அவருடையவை அல்ல.

நாம் இங்கிருந்து எங்கு செல்வோம்? நாங்கள் எப்படி முதலில் இங்கு வந்தோம்? திடீரென்று, கடந்த மாதம் ஒரு காலை வேளையில், இரு தரப்பிலும் ராணுவ தளபதிகளின் ஒருங்கிணைந்த அறிக்கைகளைக் கண்டோம். எல்லைப் பகுதிகளில் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கான 2003 உடன்படிக்கையை மீண்டும் கடைப்பிடிக்க உறுதியாக இரு தரப்பும் ஒப்புக்கொள்வதாகச் சொன்னது சொன்னது அந்த அறிக்கை.

"கடந்த காலங்களை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்லுங்கள்" என்று ஒரு பாகிஸ்தான் ஜெனரல் கூறும்போது, அதற்கு என்ன அர்த்தம்?

இதன் பொருள்... இந்தியா கடந்த கால நிகழ்வுகளை மறக்க வேண்டும் என்பதுதான். ஒரே எதிரியை எதிர்த்துப் போராடுவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு, இந்த உணர்வைப் பாராட்டுவது எளிது.

பனிப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில், மிகைல் கோர்பச்சேவுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் ஒரு வரியைப் பயன்படுத்துவார். அது: 'நம்புங்கள், ஆனால் உறுதி செய்து கொள்ளுங்கள்'. பாகிஸ்தானை கையாளும்போது நாம் அதை சற்று மாற்றி, 'நம்பிக்கையின்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்' என்று பயன்படுத்தலாம். பாகிஸ்தானின் ஒவ்வொரு நகர்வையும் அதீத சந்தேகத்துடன் அணுக வேண்டியிருக்கிறது.

இதன்மூலம் இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது. அண்டை நாடுகள் அல்லது அதன் பிராந்தியங்களின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற உறுதி, அவரது உரையின் மூலம் வெளிப்படுகிறது.

இரண்டாவது, பாகிஸ்தான் ராணுவ தளபதி உரையில், காஷ்மீர் பற்றிய குறிப்பு இடம்பெற்றிருந்தது. அதில், ஒரு நுணுக்கம் இருந்தது. நிச்சயமாக, இரு நாட்டு உறவுகளின் முன்னேற்றம் என்பது இந்தியா அதன் காஷ்மீரில் ஒரு 'உகந்த சூழலை' உருவாக்குவதைப் பொறுத்தது என்றார். மேலும், ஆகஸ்ட் 5, 2019-க்கு முந்தைய நிலை, அதாவது ஜம்மு-காஷ்மீருக்கான அந்தஸ்தை மீண்டும் வழங்கி, அதை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை நுணுக்கமாக அவர் இந்தியாவுக்கு நினைவூட்டியுள்ளளார்.

கடந்த ஏழு ஆண்டுகளில், எட்டு பட்ஜெட்டுகளில் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு ஓரளவு குறைந்துவிட்டது. காரணம், இந்தியா போருக்குத் தயாரில்லை.

மோடி அரசாங்கம் போர் இல்லாத கொள்கையை உருவாக்க முடியும். ஏனெனில், அவ்வாறு செய்வதுதான் வலுவான முடிவாக இருக்க முடியும். "குறைந்தபட்சம் தோல்வியுற்றாலும் போராடிய" நேருவைப் போலல்லாமல், 'சீனாவுடன் போருக்குச் செல்லவில்லை' என்று பலர் மோடியை கேலி செய்தனர். மோடியிடம் இப்போது இருந்ததைவிட 1962-ல் நேரு மிகவும் பலவீனமான அரசாங்கமாக இருந்தார். சண்டையிடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. ஆனால், மோடி அந்த வலையில் விழ முடியாத அளவுக்கு வலிமையானவராக இருக்கிறார். அவர் போரை அல்ல, அமைதியை விரும்புவார். - சேகர் குப்தா