Nvidia Reuters
உலகம்

என்விடியாவின் புதிய தலைவர் யார்? போட்டியில் 3 இந்தியர்கள்!!

4 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள என்விடியா நிறுவனத்தை ஆளப்போவது யார் என்ற ட்ரில்லியன் டாலர் கேள்விக்கு விடை காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலைவர் பதவிக்கான போட்டியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

PT WEB

4 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள என்விடியா நிறுவனத்தை ஆளப்போவது யார் என்ற ட்ரில்லியன் டாலர் கேள்விக்கு விடை காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலைவர் பதவிக்கான போட்டியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

Nvidia

உலகிலேயே மதிப்பு வாய்ந்த 2ஆவது பெரிய நிறுவனமாக திகழும் என்விடியாவுக்கு 33 ஆண்டுகளாக தலைவராக இருந்த ஜென்சன் ஹுவாங் உளவு சர்ச்சையில் பதவி விலகியுள்ளார். இந்நிலையில் அவரது இடத்திற்கு ரனே ஹாஸ் (RENE HAAS) என்பவரை நியமிக்க பேச்சுகள் நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அமெரிக்காவை சேர்ந்த ஆர்ம் ஹோல்டிங்ஸ் என்ற செமிகண்டக்டர் மற்றும் மென்பொருள் வடிவமைப்பு நிறுவன தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். என்விடியா நிறுவனத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.

ஆப்பிள் முன்னாள் தலைமை அதிகாரி டிம் குக் பெயரும் போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு தலைமைப்பதவி தர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாக ஆதரவளித்திருந்தார். இன்டல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி பால் கெல்சிங்கர் (PAL GELSINGER), என்விடியாவின் போட்டி நிறுவனமான ஏஎம்டி (AMD) தலைமை அதிகாரி லிசா சூ ஆகியோர் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

சஞ்சய் மெஹ்ரோத்ரா, நிகேஷ் அரோரா, தாமஸ் குரியன் ஆகிய 3 இந்திய வம்சாவளியினர் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஜென்சன் ஹுவாங் மீண்டும் தலைவராக வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கும் இது தொடர்பான கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.