அமெரிக்க இடைக்காலத் தேர்தலில்ஆளும் குடியரசுக் கட்சிக்கு கிடைத்த தோல்வி அடுத்து வரும் அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் நிற்கும் வேட்பாளருக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 2028இல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜார்ஜியா மாகாண செனட்டர் ஜான் அசாஃப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அதிபர் ஒபாமா போன்றே கொள்கைகளைக் கொண்ட இவர் அடுத்த ஒபாமா என்றே கூறப்படுகிறது.
இவருக்கு 39 வயது மட்டுமே ஆவது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது. ஜனநாயகக் கட்சி போட்டியாளர்களில் ஜான் அசாஃபுக்கு நியூயார்க் எம்.பி., அலெக்சாண்ட்ரியா கார்டெஸ் சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் வெற்றி வாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் நிறுத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் தற்போதுள்ள அதிருப்தியை சரி செய்ய ஜே.டி.வேன்ஸ் இப்போதே பணிகளைத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மேற்காசியப் போர், விலைவாசி உள்ளிட்டவை தேர்தலில் தாக்கம் ஏற்படுத்திய நிலையில் அதைச் சரிசெய்வது குறித்து வேன்ஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ருபியோவுக்கும் ஓரளவு வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.