உலகம்

"பெண்ணாக இருப்பதால் என்னை எளிதில் டார்கெட் செய்கிறார்கள்” - WHO அதிகாரி மரியா வான் வேதனை!

Sinekadhara

இளையவளாக இருப்பதால் எளிய இலக்காக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார் WHO அதிகாரி மரியா வான் கெர்கோவ்.

கொரோனா முதல் அலை உலகளவில் பரவத்தொடங்கிய 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் மக்கள்முன் தோன்ற ஆரம்பித்த உலக சுகாதார நிறுவன அதிகாரிகளில் ஒருவரான மரியா வான் கெர்கோவ் தற்போது அனைவருக்கும் பரிச்சயமான ஒருவாராக மாறிவிட்டார். ஆனால் இந்த பரிச்சயம் குறைகளுடன் தான் இருப்பதாக கூறியுள்ளார் மரியா. வெள்ளிகிழமை அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க ஆண்டு கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அவர் பேசுகையில், குறிப்பாக பெண் விஞ்ஞானிகள் சமூக ஊடகங்களில்தான் பெரிதளவில் தாக்கப்பட்டு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார். 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவை கொரோனாவுக்கு எதிராக செயல்படவில்லை என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பிரேசில், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திலுள்ள பெண் விஞ்ஞானிகளுக்கு கொலை விரட்டல்கள் மற்றும் இணைய துன்புறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக புகாரளித்தனர்.

பொதுவாகவே ஆண்களைவிட பெண்களே எளிதான இலக்காக பார்க்கப்படுகின்றனர். இதை நான் என் உடன் பணிபுரிபவர்களிடையேகூட பார்க்கிறேன். நான் இளைய பெண்ணாக இருப்பதாக எளிதான இலக்காக இருக்கிறேன் என்கிறார் 44 வயதான மரியா.

கொரோனா தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் மக்கள் மாஸ்க் அணியவேண்டிய அவசியமில்லை என்று கூறிய உலக சுகாதார நிறுவனம் 2 மாதங்களுக்குப்பிறகு தனது முடிவை மாற்றியது. இது கடுமையான விமர்சனத்தை சந்திக்க நேர்ந்தாலும் இறுதிவரை முடிவை மாற்றவில்லை என்றார்.

மேலும், நான் முக்கிய தகவல்களைப் பெற சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறேன். மக்களை மியூட் செய்கிறேன். ஆனால் ப்ளாக் செய்கிறதில்லை. ஏனென்றால் ஆரம்பத்தில் சிலரை ப்ளாக் செய்ததால், மிக மோசமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகவேண்டி இருந்தது. நான் தினசரி வேலை மற்றும் அதன்மீது கவனம் செலுத்துவதால் இதுபற்றியெல்லாம் யோசிப்பதில்லை என்று கூறியுள்ளார் மரியா.