உலகம்

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஆபத்து... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

webteam

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "கொரோனாவை அதிக அளவில் கட்டுப்படுத்திய நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த் திவருகின்றன. ஆனால் விரைவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவது பேரிடருக்கான செய்முறையாக மாறிவிடும்" என்று எச்சரித்துள்ளார்.

மேலும், ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நாடுகள் தொற்று பரவலைத் தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய டெட்ரோஸ், "இது சாத்தியமற்ற சமநிலை போலத் தோன்றும். இது அதுவல்ல" என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு நாடுகளும் மக்களும் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை டெட்ரோஸ் அறிவித்தார். தொற்று அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம், நோய் பாதிப்புள்ளவர்களைப் பாதுகாத்தல், சுய கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல், கண்டறிதல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல், பரிசோதனை செய்தல் மற்றும் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அறிதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.