உலகம்

ஜோ பைடன் அமைச்சரவையில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

webteam

ஜோ பைடன் வரும் 20 ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவி ஏற்ற நிலையில், அவரது அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெற வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த துறை வெளியுறவு துறை. முன்னாள் இணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஆண்டனி பிளிங்கெனுக்கு வெளியுறவு துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சராக லாய்டு ஆஸ்டின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் இப்பதவியை அலங்கரிக்கும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கராக இவர் இருப்பார். நிதித்துறை பொறுப்பு ஜேனட் யெல்லன் என்பவருக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது. உள்நாட்டு பாதுகாப்பு துறை அலேஜாண்ட்ரோ மேயர்கஸுக்கும், உள்துறை அமைச்சர் பொறுப்பு டெப் ஹாலாண்டுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. அட்டார்னி ஜெனரலாக மெர்ரிக் கார்லேண்டை ஏற்கனவே ஜோ பைடன் அறிவித்துள்ளார்.