டொனால்டு ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

அதிபர் ட்ரம்புக்கு கண்டறியப்பட்ட நோய்.. வெள்ளை மாளிகை தகவல்!

அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு 'chronic venous insufficiency' எனப்படும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

PT WEB

அமெரிக்க அதிபராக டொனால் ட்ரம்ப் மீண்டும், கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதிபராக அவர், பதவியேற்ற நாள் முதல் குடியேற்றக் கொள்கை, வரி விதிப்பு, விசா கெடுபிடி எனப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு 'chronic venous insufficiency' எனப்படும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதிபர் ட்ரம்பின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில், இது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. கால்களில் இருந்து இதயத்திற்கான ரத்தம் செல்லும் நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால் இந்த நிலை உருவாகும் என கூறப்படுகிறது. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் சாதாரணமான வீரியமற்ற பாதிப்பு இது என கூறியுள்ள வெள்ளை மாளிகை, அதிபர் ட்ரம்ப் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.