உலகம்

உக்ரைனை தாக்காமல் இருந்தால்...ரஷ்யாவுக்கு வாய்ப்பு கொடுத்த அமெரிக்கா

உக்ரைனை தாக்காமல் இருந்தால்...ரஷ்யாவுக்கு வாய்ப்பு கொடுத்த அமெரிக்கா

Sinekadhara

உக்ரைன் மீதான தாக்குதல் முடிவை கைவிட்டால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவும் கடைசி நிமிடம் வரை தூதரகரீதியாக ரஷ்யாவுடன் பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்காவிட்டால், வருகிற வியாழக்கிழமை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவை சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்பட்டுள்ளது. போர் புரியும் திட்டத்தை ரஷ்யா கைவிட்டால் அந்நாட்டுக்கு எதிரான தங்கள் நிலையையும் உடனடியாக மாற்றிக் கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாக பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

ஆனால், உக்ரைன் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்தவே ரஷ்யா தீவிரமாக தயாராகி வருவதே இப்போதுள்ள நிலவரம் என்ற அவர், அப்படி நடந்தால் அதற்கான கடுமையான பின்விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இதற்கிடையே, அமெரிக்கா, ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான சந்திப்பு நடைபெற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசியுள்ளார்.