middle east map, trump x page
உலகம்

மத்திய கிழக்கில் ராணுவத் தளங்கள்.. ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா!

வளைகுடா நாடுகள் பலவற்றில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளன. இதன் காரணமாகவே அப்பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அவை எங்கெங்கு உள்ளன என பார்க்கலாம்.

PT WEB

அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளம் பஹ்ரைனில் அமைந்துள்ளது. இந்த தளம், 4 கண்ணிவெடி எதிர்ப்புக் கப்பல்கள், இரண்டு தளவாட ஆதரவு கப்பல்கள் மற்றும் பல அமெரிக்க கடலோர காவல்படை கப்பல்களை கொண்டுள்ளது. இது 1948ஆம் ஆண்டு முதல் அமெரிக்க கடற்படையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானப் படைத் தளம் மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமாகும். இதில் சுழலும் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈராக்கில் உள்ள அல் - அன்பார் கவர்னரேட்டில் இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் உள்ளன. இங்கு அமெரிக்காவின் 2,500 துருப்புகள் நிறுத்தி வைக்கப்படுள்ளன. தெற்கு சிரியாவில் உள்ள அல்தன்ஃப் காரிஸன் விமானத்தளம், ஈரானுடன் தொடர்புடையவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குவைத்தில் உள்ள அலி அல்-சேலம் விமானத்தளம் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, அதேபோல் மற்றொரு முக்கிய தளமான கேம்ப் அரிஃப்ஜன் விமானத்தளம் ராணுவ உபகரணங்களை வழங்குகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமானப் படைத்தளம் எஃப் - 22 ராப்டார் போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை இயக்குகிறது.