உலகம்

இனி 4 பேர் அல்ல.. அதற்கும் மேல் - வாட்ஸ்அப் வீடியோ காலில் மாற்றம் கொண்டுவர திட்டம்!

இனி 4 பேர் அல்ல.. அதற்கும் மேல் - வாட்ஸ்அப் வீடியோ காலில் மாற்றம் கொண்டுவர திட்டம்!

webteam

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோகால் செய்யும் வசதி அறிமுகம்
செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கையை மக்களிடத்தில் கொண்டு
சேர்க்கும் வலுவான ஆயுதமாக ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் உள்ளன. அதேபோல் ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின்
பொழுதுபோக்காகவும், நண்பர்களுடன் இணைந்திருக்கவும் ஃபேஸ்புக் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள்தான் பெரியளவில்
கைகொடுக்கின்றன. பொழுதுபோக்குக்கு மட்டுமல்லாமல், அலுவலகப் பணிகள் கூட வீடியோகால்கள் மூலமாக நடைபெறுகின்றன.

 பலர் வீடுகளிலிருந்தே பணியாற்றி வரும் சூழலில் அலுவலக கூட்டங்கள் அனைத்தும் ஆன்-லைன் வழியாகவே நடத்தப்படுகின்றன. இதற்காக
பல செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் ஜூம் செயலி குறித்த புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து அந்த செயலி பாதுகாப்பானது
இல்லை என இந்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோகால் மூலம் பேசும் வசதியை அறிமுகப்படுத்த
திட்டமிட்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 4 பேர் மட்டுமே வீடியோகால் மூலம் பேசும் வசதி உள்ளது.


இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 4 பேருக்கு மேல் வீடியோகால் பேசும் வசதி பயனாளர்களுக்கு பயன்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த வசதி கிடைப்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.